
இந்தியாவில் டேட்டா சென்டர் கட்டமைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பு சந்தையின் மதிப்பு, வரும் 2035ம் நிதியாண்டிற்குள் 8.50 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என கே.பி.எம்.ஜி. ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய மதிப்பீட்டின்படி, வரும் 2030ல் இந்தியாவின் டேட்டா சென்டர் கட்டமைப்பு சந்தை மதிப்பு 2.85 லட்சம் கோடி ரூபாயாகவும், மொத்த மின் திறன் 7 முதல் 7.5 ஜிகாவாட் அளவிற்கும் அதிகரிக்கும்.
செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சியால் அதிக திறன் கொண்ட மின் அமைப்புகள் தேவைப்படுவதால், டேட்டா சென்டர்கள் காற்றை கொண்டு குளிரூட்டும் முறையில் இருந்து திரவ குளிரூட்டும் முறைக்கு மாறி வருகின்றன.