
தமிழகத்தின் மதுராந்தகம், தாராபுரம் உட்பட 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி, மேற்கு வங்கத்தின் நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் ஆகிய தொகுதிகளும் இந்த இடைத்தேர்தல் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
அசாமின் நகோன் மக்களவைத் தொகுதிக்கும் அதே நாளில் தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.