
நாடு முழுவதும் நிலவும் 5G நெட்வொர்க் சிக்கல்களைச் சரிசெய்ய, கதிர்வீச்சு வரம்பை 5 வாட்ஸ்/சதுர மீட்டரிலிருந்து 10 வாட்ஸ்/சதுர மீட்டராக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
சர்வதேச தரத்திற்கு இணையான இந்த மாற்றம் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருவதால், ஏர்டெல், ஜியோ மற்றும் வோடஃபோன் பயனர்களுக்கு இணைய வேகம் அதிகரிக்கும்.
இந்த கதிர்வீச்சு அதிகரிப்பால் மனிதர்களுக்கோ அல்லது பறவைகளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.