
தைவானுடன் தூதரக உறவைத் தொடர்ந்து பேணி வருவதால் பராகுவே மற்றும் பெலீஸ் நாடுகள் மீது சீனா அதிரடி பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
பராகுவே தகவல் தொழில்நுட்ப மந்திரி குஸ்தாவோ வில் லேட் மற்றும் பெலீஸ் வெளியுறவு மந்திரி பிரான்சிஸ் பொன்சேகா ஆகியோரின் சீனாவில் உள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
மேலும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் சீனா, ஹாங்காங் மற்றும் மக்காவ் நாடுகளுக்குள் நுழையப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளதாகச் சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.