
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் பெரியார், அம்பேத்கர், நேரு ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்தி விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையடுத்து, நீக்கப்பட்ட தலைவர்களின் பெயர்கள் மீண்டும் குறிப்பேட்டில் சேர்க்கப்படும் என்று அமைச்சர் வி.சம்பத்குமார் உறுதியளித்துள்ளார்.