
பெங்களூரு BEML தொழிற்சாலையில் மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்தியாவின் முதல் B28 புல்லட் ரயில் உருவாக்கப்பட்டுள்ளது.
ரூ.1.10 லட்சம் கோடி மதிப்பிலான இத்திட்டத்துக்கு ஜப்பான் சர்வதேச கூட்டுறவு கழகம் 81 சதவீதம் நிதியை கடனாக வழங்கியுள்ளது.
2027 மே - ஜூன் மாதங்களில் முதற்கட்ட சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ள நிலையில், 2027 ஆகஸ்ட் சுதந்திர தினத்தை இலக்காகக் கொண்டு முதல் வழித்தடம் பயன்பாட்டுக்கு வரும்.