பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் ஆய்வின் மூலம், அதிக சூடான தேநீர் மற்றும் கோப்பி குடிப்பதால் உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து மூன்று மடங்கிற்கும் மேல் அதிகரிக்கக்கூடும் எனத் தெரியவந்துள்ளது.
மிதமான சூட்டில் பானங்களை அருந்துபவர்களுடன் ஒப்பிடும்போது அதிக சூட்டில் பானங்களை விரும்புபவர்களுக்கு 'எசோபேகியல்ஸ்குவாமஸ் செல் கார்சினோமா' ஆபத்து இரண்டு மடங்கு அதிகமாகிறது.
65 டிகிரி செல்சியஸுக்கு அதிகமான வெப்பநிலையில் குடிக்கப்படும் பானங்கள் புற்றுநோயை உருவாக்கக்கூடிய சாத்தியக்கூறு கொண்டவை என சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி முகவரகம் வரையறுத்துள்ளது.