
பிலிப்பைன்ஸில் விமானப்படைத் தளத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரண்டு ராணுவ விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்டன.
இந்த கோர விபத்தில் நான்கு விமானிகள் உயிரிழந்தனர் என்று விமானப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானப்படையிடம் உள்ள 'எஸ்எப்-260' ரக விமானங்களின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.