
கவாசகி நிறுவனம் தனது புதிய Z300 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளதுடன், இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 3.24 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நின்ஜா 300 ஸ்போர்ட்ஸ் பைக்கை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த மோட்டார்சைக்கிளில் 296சிசி, லிக்விட்-கூல்டு, பேரலல்-ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
இந்த என்ஜின் 39.4BHP பவர் மற்றும் 26.3NM டார்க் உற்பத்தி செய்வதுடன், ஸ்லிப்-அண்ட்-அசிஸ்ட் கிளட்ச் கொண்ட 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.