
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற டிஎன்பிஎல் டி20 போட்டியில், மதுரை பேந்தர்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணி வீழ்த்தியது.
முதலில் பேட் செய்த மதுரை அணி 20 ஓவர்களில் 157 ரன்கள் எடுத்த நிலையில், திருப்பூர் தமிழன்ஸ் அணி 17.4 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
திருப்பூர் தமிழன்ஸ் அணியின் பிரதோஷ் ரஞ்சன் பால் 65 ரன்களும், துஷார் ரஹேஜா 48 ரன்களும் குவித்து, அந்த அணிக்கு 4-வது வெற்றியைப் பெற்றுத் தந்தனர்.