
பழநி தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடிக்கு மோசடி செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மோசடி தொடர்பாக சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பதிவு செய்த அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு குழு தணிக்கை செய்து 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என பத்திரப்பதிவு துறை உத்தரவிட்டுள்ளது.