
அஜய் தேவ்கன் நடிப்பில் சஸ்பென்ஸ் திரில்லர் கதைக்களத்துடன் வெளியாகியுள்ள ‘திரிஷ்யம்: தி கன்க்ளூஷன்’ திரைப்படம் வெளியான 4 நாட்களிலேயே உலகளவில் ரூ.308 கோடி வசூல் செய்துள்ளது.
முந்தைய பாகங்களைப் போலவே இப்படத்தில் அஜய் தேவ்கன் விஜய் சல்கோன்கர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதோடு, ஸ்ரேயா சரண், தபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெய்தீப் அஹ்லாவத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தொடர்ந்து வசூல் அதிகரித்து வருவதால், விரைவில் இப்படம் ரூ.500 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.