
மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் நோய் வேகமாகப் பரவி வருவதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,022 ஆக அதிகரித்துள்ளது.
மிகக் கொடிய இந்நோயின் தாக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 3,398 ஆக உயர்ந்துள்ளது.
வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு சுகாதாரத்துறை திணறிவரும் நிலையில், உலக சுகாதார அமைப்பு காங்கோவுக்கு தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.