
மத்திய பிரதேச மாநிலம் மைஹார் மாவட்டத்தில், மதுபோதையில் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் சமைலால் கோல், மாணவர்களைக் கொண்டு மலம் சுத்தம் செய்ய வைத்துள்ளார்.
பெற்றோர்களின் புகாரைத் தொடர்ந்து கிராம பஞ்சாயத்து தலைவர் நடத்திய ஆய்வில், வகுப்பறை சுவர்கள் குட்கா கறைகளால் பாழாகியிருந்தது கண்டறியப்பட்டது.
சம்பவம் குறித்து கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், ஆசிரியர் மீது இடைநீக்கம் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.