
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதவியேற்றது முதல், விதிமீறல்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
குறிப்பாக, கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 1.75 லட்சம் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் பிறப்பு சுற்றுலா தொடர்பான 2,300 விசாக்களும் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மக்களை பாதுகாப்பதில் எங்களது உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வரலாற்று சிறப்புமிக்க மைல்கல் இது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.