
இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இடம்பெறாதது மற்றும் ஐபிஎல் தொடரில் சுமாரான செயல்பாடு காரணமாக கடும் அழுத்தத்தில் இருப்பதாக முகமது கைப் கூறியுள்ளார்.
இருப்பினும், டெஸ்ட் கிரிக்கெட்டில் பண்ட் ஒரு சிறந்த வீரராகவே விளங்குவதாகவும், அவருக்கு இன்னும் ஒன்று அல்லது இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் கைப் வலியுறுத்தினார்.
ரிஷப் பண்ட் இதுவரை 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 43.37 சராசரியுடன் 3557 ரன்கள் குவித்துள்ளார், இதில் 8 சதங்களும் 19 அரைசதங்களும் அடங்கும்.