/nakkheeran/media/media_files/2026/09/15/e-2026-09-15-19-18-58.jpg)
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனித இனத்திற்கே ஆபத்தாக முடியும் என ஓபன் ஏஐ மற்றும் ஆந்த்ரோபிக் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், இது குறித்துப் பதிலளித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஏஐ குறித்த அத்தகைய எச்சரிக்கைகள் எதிர்மறை சக்திகளால் பரப்பப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஏஐ துறையில் அமெரிக்கா சீனாவுக்கு முன்னோடியாகத் திகழும் நிலையையே தான் தொடர விரும்புவதாகவும், போட்டியில் வெற்றி பெறுவதே முக்கியம் என்பதால் அபாயங்களைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.