Indian Politics
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு

hindutamil1h
THE BRIEF
1

சென்னை பட்டினப்பாக்கத்தில் 20 லட்சம் சதுர அடியில், ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

2

இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் முள்ளிக்குப்பம் உள்ளிட்ட 9 கிராமங்களைச் சேர்ந்த மீனவ மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

3

சுனாமி பாதிப்புப் பகுதி மற்றும் அடையாறு கழிமுகப் பகுதியாக இருப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு வெள்ள அபாயமும் ஏற்படும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.