தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்று வரும் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் சென்னை மாவட்டம் 103 தங்கம் உட்பட மொத்தம் 223 பதக்கங்களைக் குவித்து முதலிடத்தில் தொடர்கிறது.
பள்ளி மாணவர்களுக்கான ஜூடோ போட்டியில் சென்னை வீரர்கள் அஜித்குன்வார், தர்ஷன் பிரியன், அஷ்வின் மற்றும் ஆகாஷ் ஆகியோர் தங்கம் வென்றனர்.
நேற்று வரை நிறைவடைந்த 294 போட்டிகளின் முடிவில், செங்கல்பட்டு மாவட்டம் 113 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்திலும், கோவை மாவட்டம் 80 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.