டெல்லி ஜந்தர் மந்தரில் தடையை மீறி போராட்டம் நடத்திய சிஜேபி தலைவர்கள் சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையினர் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறwப்பட்ட வழக்கில் அவர்களுக்கு 5 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கே ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.