
தென் கொரியாவின் ஹூண்டாய் மோட்டார் குழுமம் 2026 முதல் 2032 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் 15.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.1.4 லட்சம் கோடி) முதலீடு செய்யவுள்ளது.
டெல்லியில் ஹூண்டாய் மோட்டார் குழும நிர்வாகத் தலைவர் உய்சன் சுங் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த முதலீடு உற்பத்தி விரிவாக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் எதிர்கால போக்குவரத்துத் தொழில்நுட்பங்களுக்குப் பயன்படுத்தப்படவுள்ளது.