
இலங்கையின் எரிபொருள் இறக்குமதி செலவு நடப்பாண்டின் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 4,072.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 61.6% கூடுதல் செலவாகும் என்று மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் எரிபொருள் இறக்குமதிக்காக 450.6 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை விட 76.5% உயர்வாகும்.