
தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்ற பிறகு, 2026-27 நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரியவில்சன் இன்று காலை 10:00 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.
வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டை வேளாண் அமைச்சர் வினோத் நாளை தாக்கல் செய்ய உள்ள நிலையில், இரு அமைச்சர்களுக்கும் துறை செயலர்கள் மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய்யின் ஒப்புதலுடன் இறுதி செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட் அறிக்கையை, அமைச்சர்கள் சட்டப்பேரவையில் வாசிப்பதற்கான நுணுக்கங்களை துறை சார்ந்த வல்லுநர்கள் கற்றுக்கொடுத்துள்ளனர்.