
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை காங்கிரஸ் கட்சியின் போராட்டம் தொடரும் என பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் அவர் தன்னிச்சையாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருவதால், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
தேர்தல் செயல்பாடுகள் பாரபட்சமின்றி நேர்மையாக மாற்றப்படும் வரை இந்த அறப்போராட்டம் கைவிடப்படாது என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.