
இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் பேஸ்புக் மூலம் விளம்பரங்கள், பிராண்ட் ஒப்பந்தங்கள் மற்றும் சந்தா கட்டணம் வழியாக வருமானம் ஈட்டுபவர்கள் கட்டாயம் வருமான வரி செலுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வணிகம் அல்லது தொழில்முறை வருமானம் உள்ளவர்கள் தணிக்கை தேவையில்லாத நிலையில், 2025-26 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31-ம் தேதி கடைசி நாளாகும்.
படைப்பாளிகள் தங்களுக்கு வரும் பல்வேறு வருமான ஆதாரங்களைச் சரியாகக் கண்காணித்து கணக்குகளைப் பராமரிக்க வேண்டும் என டெக் மாஸ்டர் நிறுவனத்தின் சிஇஓ அரவிந்த் கர்ரா அறிவுறுத்தியுள்ளார்.