
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 28வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன.
இரவு 7.30 மணிக்குத் தொடங்கவுள்ள இந்தப் போட்டி, தொடரின் இரண்டாம் கட்டப் போட்டிகளின் ஒரு பகுதியாக நடைபெறுகிறது.
கடந்த 4ம் தேதி தொடங்கிய இந்த 10வது டிஎன்பிஎல் தொடரின் முதல்கட்டப் போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றன.