நைஜீரியாவின் ரிவர்ஸ் மாகாணத்தில் கச்சா எண்ணெய் குழாயை உடைத்து திருட முயன்றபோது ஏற்பட்ட நச்சுப்புகை கசிவால் 37 பேர் உயிரிழந்தனர்.
ஒக்காரி ஜெட்டி துறைமுகத்தில் நள்ளிரவில் 200-க்கும் மேற்பட்டோர் படகுகளில் வந்து எண்ணெய் திருட முயன்றபோது, குழாய்களில் இருந்து வெளியேறிய அதிக அழுத்தத்திலான நச்சுப்புகையால் பலர் மூச்சுத்திணறி மயங்கி விழுந்தனர்.
மீட்புப்படையினர் காயமடைந்தவர்களை மருத்துவமனைகளில் அனுமதித்துள்ள நிலையில், பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.