
அந்தமான் அருகே புதிய காற்றழத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், தமிழகத்தில் தஞ்சாவூர் உள்பட 21 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை நீலகிரி, கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 21 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் பெட்டமுகிலாளத்தில் 15 செமீ மழை பதிவாகியுள்ளது.