
இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவை வழங்குவதற்கான ஸ்டார்லிங்க் திட்டங்களை சில பணக்காரர்கள் தங்களது ஏகபோக ஆதிக்கத்தை தக்கவைக்க முடக்குவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள 11,256 கிராமங்களில் 4ஜி சேவை கிடைப்பதில் சிக்கல் உள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பயனர் ஒருவரின் கருத்துக்கே எலான் மஸ்க் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
இந்தியாவுக்கு ஸ்டார்லிங்க் சேவை அவசியமானது என்றும், இதனை முடக்குவது இந்திய மக்களுக்கு எதிரான குற்றம் என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.