
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளதுடன், வங்கதேசத்தைச் சேர்ந்த 5 ஆயிரம் பேரின் விசாக்களை ரத்து செய்துள்ளது.
சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பகிர்வது மற்றும் விசா ஆவணங்களில் குளறுபடிகள் இருந்தால் விசாக்கள் தானாகவே ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
முன்னறிவிப்பு இன்றி விசா ரத்து செய்யப்பட்டதால் ஐக்கிய அரபு அமீரகத்திற்குத் திரும்ப முடியாமல் வங்கதேசத்தினர் தவித்து வருவதுடன், வங்கதேச அரசும் தூதரக ரீதியாகக் கோரிக்கை விடுத்துள்ளது.