
‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படம் மூலம் பிரபலமான மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி, தனது புதிய படமான ‘அவரச்சன் அண்ட் சன்ஸ்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது அவர் தனது மனைவி ரீது சக்காரியாவை விவாகரத்து செய்துவிட்டதாகப் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
இருவரும் கடந்த 2016-ல் திருமணம் செய்துகொண்ட நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக 2024-ல் தனித்தனியாக வாழத் தொடங்கி தற்போது சட்டரீதியாகப் பிரிந்துவிட்டனர்.