
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, இந்திய பயிற்சியாளர்களின் திறமை மீது முழு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியப் பயிற்சியாளர்களுக்கு உரிய அங்கீகாரமும் வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், வெளிநாட்டு பயிற்சியாளர்கள் பதக்கத்திற்கு உத்தரவாதம் தர முடியாது என்று கூறியுள்ளார்.
மருத்துவக் குழுவிலும், உடலியக்க சிகிச்சையிலும் மட்டும் வெளிநாட்டு நிபுணர்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.