
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த ஒரு மாதத்தில் நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களில் இருந்து 11,790 டன் வண்டல் மண் மற்றும் ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டுள்ளன.
மாநகராட்சி சார்பில் 1,671.39 கி.மீ நீளமுள்ள மழைநீர் வடிகால்கள் மற்றும் 1,10,082 வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் தூர்வாரும் பணிகள் செப்டம்பர் 30-க்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 430 கி.மீ வடிகால்கள் மற்றும் 18,000 வண்டல் வடிகட்டித் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் பணிகளும் பருவமழைக்கு முன்னதாகவே முடிக்கப்படவுள்ளது.