
தேர்வு முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு திருத்த மசோதா 2026, மக்களவையில் இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவின்படி, தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் தனிநபர்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.50 லட்சம் அபராதமும், கும்பலாகச் செயல்படுபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்படும்.
மசோதா மீதான விவாதம் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற நிலையில், சபாநாயகர் இதனை நிறைவேற்றியதாக அறிவித்தார்; அடுத்து மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட உள்ளது.