
துலீப் டிராபி கால் இறுதிப் போட்டியில் வடகிழக்கு மண்டல அணியை இன்னிங்ஸ் மற்றும் 210 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கிழக்கு மண்டலம் அரையிறுதிக்கு முன்னேறியது.
முதல் இன்னிங்ஸில் கிழக்கு மண்டலம் 467 ரன்கள் குவித்த நிலையில், வடகிழக்கு மண்டலம் 111 மற்றும் 146 ரன்களுக்குச் சுருண்டது.
கிழக்கு மண்டல வீரர் அணுகுல் ராய் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.