
இந்தியா உட்பட 59 நாடுகள் மீது அதிக வரி விதித்த விவகாரத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் மீது 25 அமெரிக்க மாகாணங்கள் சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.
பொருட்கள் உற்பத்தியில் கட்டாய உழைப்பு பயன்படுத்தப்படுவதாகக் கூறி, கடந்த மாதம் டிரம்ப் அரசு இந்த 59 நாடுகள் மீது வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 301-ஐப் பயன்படுத்தி வரி விதித்தது.
இந்த சுங்க வரி நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், வசூலிக்கப்பட்ட வரியைத் திரும்ப வழங்க வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்த மாகாணங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.