ஐசிசி மகளிர் சாம்பியன்ஸ் டிராபி டி20 தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 14 முதல் 28 வரை இந்தியாவில் நடைபெறும் என ஐசிசி சேர்மன் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வாரியம் தொடரை நடத்த இயலாத சூழலைத் தெரிவித்ததால், இந்தியா, தென் ஆப்ரிக்கா மற்றும் வங்கதேச வாரியங்கள் விருப்பம் தெரிவித்த நிலையில் இந்தியாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
மும்பை மற்றும் வதோதராவில் நடைபெறவுள்ள இந்த முதல் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா மற்றும் இலங்கை ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.