
இயக்குநர் அருண்ராஜா காமராஜுடன் இணைந்து பணியாற்றவிருந்த படம், பட்ஜெட் சிக்கல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் காரணமாகக் கைவிடப்பட்டதாக விஷ்ணு விஷால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கடந்த 10 மாதங்களாகத் தீவிரமாகத் தயாராகி வந்த இந்தப் படத்தை, தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என்ற முறையில் தொடர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாகச் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைகள் உரிய காலத்தில் நடைபெறும் என்றும் விஷ்ணு விஷால் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.