
சர்வதேச கடல் வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் செல்லும் கப்பல்களுக்கு சுங்க வரி மற்றும் கட்டணம் வசூலிக்க முயலும் ஈரானின் நடவடிக்கைக்கு எதிராக 60-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்று திரண்டுள்ளன.
ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுக் கொள்கை தலைவர் கஜா கல்லாஸ் இந்த கூட்டறிக்கையை வெளியிட்டதுடன், கடல் வழிப் போக்குவரத்து அனைவருக்கும் திறந்திருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.
ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரிட்டன், கனடா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் சர்வதேச கடல் சட்டங்களின்படி போக்குவரத்தின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன.