
கனடாவின் எட்மன்டன் நகரில் நடைபெற்ற போட்டியில், 56 நபர்களை 16 வினாடிகளில் தாண்டி 'ஷார்டோனே' என்ற நாய் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.
ஜெனிபர் ஃப்ரேசர் என்பவரால் பயிற்சி அளிக்கப்பட்ட நான்கு வயதுடைய இந்த ஆஸ்திரேலியன் ஷெப்பர்ட் நாய், ஜூன் 14 அன்று நடைபெற்ற போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தியது.
மைதானத்தில் குனிந்த நிலையில் வரிசையாக நின்றிருந்த 56 நபர்களைத் தாண்டி, நாய் தனது அபாரமான திறமையை வெளிப்படுத்தியதாக பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.