
சூடானின் மேற்கு கோர் டோபன் மாகாணத்தில் உள்ள எல்-நஹொட் நகருக்கு அருகே செயல்பட்டு வரும் அல்-சாரா தங்கச் சுரங்கத்தில் தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது.
இந்த கோர விபட்டில் சிக்கி 60 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்; சக தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் உடனடியாக மீட்புப் பணியில் இறங்கினர்.
பல தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் தொடர்ந்து சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது, அதேசமயம் அவர்களை மீட்க முழு வீச்சில் பணிகள் நடந்து வருகின்றன.