
சென்னையில் நடைபெற்ற குரு ஸ்ரீ உடுப்பி லக்ஷ்மி நாராயணனின் 100-வது ஆண்டு விழாவில் பிரபுதேவா ஆடிய பரதநாட்டியம் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரபுதேவாவின் நடனம் பரதநாட்டிய இலக்கணங்களுக்கு மாறாக இருப்பதாகக் கூறி, நடிகர் சஞ்சீவின் மனைவி பிரீத்தி தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பிரபுதேவாவிற்கு ஆதரவாகவும் எதிராகவும் நெட்டிசன்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.