
உலகின் அதிவேக மனிதரான உசைன் போல்ட், தனது 40-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நீண்டநாள் காதலியான காசி பென்னட்டுடன் கிங்ஸ்டனில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
ஆகஸ்ட் 21 அன்று 'ஒன் பெல்மாண்ட்' ஹோட்டலில் நடந்த விழாவில், போல்ட் மண்டியிட்டு காசிக்கு பேரிக்காய் வடிவிலான 5 காரட் வைர மோதிரத்தை அணிவித்தார்.
2013-ல் தொடங்கிய இவர்களது 13 ஆண்டுகால காதல் பயணம், 2016 ரியோ ஒலிம்பிக்கில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது, இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகளும், 5 வயதில் இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளனர்.