
கேரளாவில் புதிய வீடு கட்டிய நபர் ஒருவர், உறவினர் வீட்டில் இல்லாததால் அந்த வீட்டின் சிசிடிவி கேமரா முன்பு நின்று கிரகபிரவேசத்திற்கு பாட்டுப்பாடி அழைப்பு விடுத்துள்ளார்.
தான் கடன் வாங்கி வீடு கட்டியுள்ளதாகவும், பரிசாகப் பொருட்களை விட பணமாக வழங்கினால் வசதியாக இருக்கும் என்றும் அவர் அந்த வீடியோவில் வெளிப்படையாகக் கேட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, மொய் பணம் மற்றும் உறவுமுறை சார்ந்த விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.