தனது சொந்த அண்ணனைத் தாக்கிய வழக்கில் அமைச்சர் மரிய வில்சன் மேற்கொண்ட சமரச முயற்சிகள் தோல்வியடைந்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரின் அண்ணி தரப்பில் சமரசத்திற்கு உடன்பட விருப்பமில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்ததை அடுத்து, வழக்கில் புகார்தாரரை நிர்பந்திக்க முடியாது என நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த குடும்பத் தகராறு மற்றும் அடிதடி வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.