
செப்டம்பர் 4-ம் தேதி அதிகாலை 2.55 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி. 17 ராக்கெட் மூலம் புவி கண்காணிப்பு 05 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
இஸ்ரோ தனியார்மயமாக்கப்படவில்லை என்றும், செயற்கைக்கோள்களின் தேவை அதிகரித்துள்ளதால் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் விளக்கமளித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர், செயற்கைக்கோள் ஏவுதல் தொடர்பான முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.