இமாச்சல பிரதேசத்தில் நிதி நெருக்கடியைச் சமாளிக்க பெட்ரோல் மற்றும் டீசல் மீது லிட்டருக்கு 60 பைசா 'கைம்பெண் மற்றும் ஆதரவற்றோர் வரி' விதிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான அரசு, கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவையில் இதற்கான மசோதாவைக் கொண்டு வந்து தற்போது அமல்படுத்தியுள்ளது.
இந்த வரி விதிப்பு மூலம் கிடைக்கும் வருவாய் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர்களின் வாழ்க்கையை மேம்படுத்தப் பயன்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.