
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் ஹேக் செய்யப்பட்டதாக வெளியான செய்திகளை நிறுவனம் மறுத்துள்ளது.
ஜூன் 29 அன்று வெளிநாட்டில் வெளியான இணையத் தாக்குதல் கூற்றே வதந்திகளுக்குக் காரணம் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எந்தவொரு அங்கீகரிக்கப்படாத ஊடுருவலோ, தரவு திருட்டோ அல்லது சேவைத் தடையோ ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.