
தமிழகத்தில் இணையவழி ஆவணப்பதிவு திட்டத்தில், அடமான ஆவணங்கள் ஆன்லைனில் பதிவு செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மோசடிகளைத் தடுக்க, வில்லங்கச் சான்றிதழில் (EC) அடமான விவரங்கள் பிரதிபலிப்பதை உறுதி செய்த பின்னரே வங்கிகள் கடன் தொகையை விடுவிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நடைமுறை மாநில அளவிலான வங்கியாளர் குழு (SLBC) மூலம் அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பதிவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.