
இந்தியாவில் இயங்கும் சுமார் 7.5 கோடி முதல் 8 கோடி பழைய இருசக்கர வாகனங்களுக்கு மீண்டும் E10 பெட்ரோலை வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
தற்போது பயன்பாட்டில் உள்ள 20% எத்தனால் கலக்கப்பட்ட E20 பெட்ரோல், கார்புரேட்டர் தொழில்நுட்பம் கொண்ட பழைய என்ஜின்களை சேதப்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.
மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன், பழைய வாகனங்களின் என்ஜின் ஆயுளைப் பாதுகாக்க E10 பெட்ரோலை மீண்டும் வழங்க பரிந்துரைத்துள்ளார்.